என் மலர்
உள்ளூர் செய்திகள்
ஈரப்பத நெல் தளர்வுகளுடன் கொள்முதல் செய்ய வேண்டும் - எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
- விவசாயிகள் தங்கள் நெல்லை மிக குறைவான விலைக்கு வெளிசந்தையில் விற்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர்.
- குமரி மாவட்டத்திலும் கன்னிப்பூ அறுவடையான நெல் கொள்முதல் செய்ய வேண்டும்
நாகர்கோவில் :
நாகர்கோவில தொகுதி எம்.எல்.ஏ. எம்.ஆர்.காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கன்னியா குமரி மாவட் டத்தில் அறுவடை காலத்தில் மாவட்டம் முழுவதும் பரவலாக மிதமான மழை பெய்து வருவதால் அறுவடை நெல்லின் ஈரப்பதத்தின் அளவு சற்று அதிகமாகவே உள்ளது. அதோடு அறுவடையான நெல்லை காய வைக்க காலநிலையும் தற்பொழுது இல்லை.
அரசு ஈரப்பதத்தை கார ணம் காட்டி கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்ய தயங்குவதால், விவசாயிகள் தங்கள் நெல்லை மிக குறைவான விலைக்கு வெளிசந்தையில் விற்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர்.
இதை பயன்படுத்தி விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை அரிசி ஆலை அதிபர்கள் மிகக் குறைவான விலைக்கு கொள்முதல் செய்கின்றனர். இதனால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்படுகின்ற னர்.
எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு கடந்த மழைக்காலத்தில் டெல்டா மாவட்டத்தில் ஈரப்பதத்தில் தளர்வுகள் பெற்று ஈரப்பதம் கொண்ட நெல் கொள்முதல் செய்தனர். அதேபோல் குமரி மாவட்டத்திலும் கன்னிப்பூ அறுவடையான நெல் கொள்முதல் செய்ய வேண்டும்
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.