என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![நாகர்.செயின் பறிப்பு வழக்கில் தேடப்பட்ட மின்வாரிய ஊழியர் விஷம் குடித்து தற்கொலை நாகர்.செயின் பறிப்பு வழக்கில் தேடப்பட்ட மின்வாரிய ஊழியர் விஷம் குடித்து தற்கொலை](https://media.maalaimalar.com/h-upload/2023/05/11/1879399-2.webp)
நாகர்.செயின் பறிப்பு வழக்கில் தேடப்பட்ட மின்வாரிய ஊழியர் விஷம் குடித்து தற்கொலை
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- நாகர்கோவில் கட்டையன்விளை பகுதியை சேர்ந்த சாந்தகுமார் என்பது தெரிய வந்தது.
- நண்பர்களுடன் சீட்டு விளையாடிக் கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது
நாகர்கோவில் :
நாகர்கோவில் நேசமணி நகர் 2-வது குறுக்கு தெரு வை சேர்ந்தவர் ஜோஸ்பின் தாமஸ் (வயது 62), முதன்மை கல்வி அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவர் நேற்று முன்தினம் தனது வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டி ருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஜோஸ்பின் தாமஸ் கழுத்தில் கிடந்த 2 பவுன் நகையை பறித்து சென்றார். இதுகுறித்து ஜோஸ்பின் தாமஸ் நேசமணிநகர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட னர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டது.அப்போது கொள்ளையன் உருவம் சிக்கியது. அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் விசா ரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அவர் நாகர்கோவில் கட்டையன்விளை பகுதியை சேர்ந்த சாந்தகுமார் என்பது தெரிய வந்தது. சாந்தகுமார் வல்லன்குமாரன்விளையில் உள்ள மின்வாரிய அலுவல கத்தில் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. தனிப்படை போலீசார் கொள்ளையில் ஈடுபட்ட சாந்தகுமாரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர்.
அப்போது அவர் வடசேரி பரமார்த்தலிங்கபுரம் பகுதியில் நண்பர்களுடன் சீட்டு விளையாடிக் கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசார் வருவதை பார்த்ததும் சாந்தகுமார் விஷம் மாத்தி ரைகளை தின்றார். உடனடியாக அவரது நண்பர்கள் மற்றும் போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலன் இன்றி சாந்தகுமார் பரிதா பமாக இறந்தார். சாந்தகுமார் தற்கொலை செய்து கொண்டது குறித்து வடசேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
கொள்ளையில் ஈடுபட்ட சாந்தகுமாரை கைது செய்ய சென்றபோது அவர் தற் கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.