search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் தெப்பத்தில் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை
    X

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் தெப்பத்தில் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை

    • தூர்ந்து கிடக்கும் கால்வாயில் அறநிலையத்துறை பொறியாளர்கள் ஆய்வு
    • தெப்பக்குளத்துக்கு தண்ணீர் வரும் பாபநாசம் கால்வாயையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    கன்னியாகுமரி,செப்.1-

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளம் கன்னியாகுமரி வடக்கு ரத வீதியில் அமைந்துஉள்ளது. பழைய மன்னர்ஆட்சி காலத்தில் இந்த தெப்பக் குளம் வெட்டப்பட்டு உள்ளது. 5 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த தெப்பக்கு ளம் 25 அடி ஆழம் கொண்டதாகும்.

    இந்த தெப்பக்குளத்துக்கு குமரி மாவட்டத்தின் கடைசி விவசாய பாசன கு ளமான குமரி சால் குளத்தின் அருகில் உள்ள பாபநாச தீர்த்த கால்வாய் வழியாக தண்ணீர் கொண்டு வந்து நிரப்பப்படுகிறது. தெப்ப குளத்துக்கு தண்ணீர் வரும் இந்த கால்வாய் நீண்ட காலமாக தூர்வாரப் படாமல் புதர்மண்டி கிடக்கி றது.

    இந்த தெப்பக்குளத்தில் தான் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் வைகாசி விசாகத் திரு விழாஅன்று தெப்ப திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் தண்ணீர் இல்லாத வறண்ட தெப்பக் குளத்தில் தான் இந்த தெப்பத்திருவிழா நடந்து வரு கிறது. அம்மனை வாகனத்தில் ஊர்வலமாக எடுத்து வந்து தண்ணீர் இல்லாத குளத்தின் கரையில் வைத்து பூஜை செய்து விட்டுஎடுத்துச் செல்லும் அவல நிலை இருந்து வருகிறது.

    இதனால் பக்தர்கள் மன வேதனை அடைந்து வருகின்ற னர். எனவே இந்த தெப்பக்குளத்துக்கு தண்ணீர் வரும் பாபநாசம் கால்வாயில் தூர்வாரி குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வந்து தெப்பக்கு ளத்தில் தண்ணீர் நிரப்பி தெப்ப திருவிழாவை ஆண்டுதோறும் நடத்த வேண்டும் என்று பக்தர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் குமரி மாவட்ட திருக்கோவில்க ளின் அறங்காவலர் குழு தலைவராக பொறுப் பேற்றுள்ள பிரபா ராம கிருஷ்ணன் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அந்த தெப்பக்குளத்துக்கு தண்ணீர் வரும் பாபநாசம் கால்வாயையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இதைத்தொடர்ந்து இந்து அறநிலையத்துறை உதவி கோட்ட பொறியாளர் மோகனதாஸ் தலைமையில் பொறியாளர்கள் கன்னியா குமரி பகவதி அம்மன் கோவில் தெப்பக்குளத்துக்கு தண்ணீர் வரும் பாபநாசம் தீர்த்த கால்வாயை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    இந்த ஆய்வின்போது கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி வார்டு கவுன்சிலர் சுபாஷ், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் பணியா ளர்கள் அழகு, சதீஷ் உள்பட பலர் சென்று இருந்தனர். தெப்பக்குளத்துக்கு தண்ணீர் வரும் பாபநாசம் தீர்த்த கால்வாயில் முதல் கட்டமாக விவேகானந்த கேந்திராவில் இருந்து தெப்பக்குளம் வரை ராட்சத குழாய் அமைத்து தண்ணீர் கொண்டு வருவதற்கான திட்ட மதிப்பீடு தயாரிப்பது குறித்து ஆய்வு செய்யப் பட்டது.

    Next Story
    ×