என் மலர்
உள்ளூர் செய்திகள்
கடைகளில் பொருட்களை கூடுதல் விலைக்கு விற்றால் ரூ.25 ஆயிரம் வரை அபராதம்
- சந்தைகள் மற்றும் அனைத்து கடைகள், வணிக நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
- 2011-ம் ஆண்டு சட்டமுறை எடையளவு (பொட்டலப் பொருட்கள்) விதிகளின் கீழ் ஆய்வு மேற்கொள்ள அறி வுறுத்தப்பட்டது.
நாகர்கோவில் :
சென்னை முதன்ைம செயலாளர், தொழிலாளர் ஆணையரால் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் 2009-ம் ஆண்டு சட்டமுறை எடையளவு சட்டம் மற்றும் 2011-ம் ஆண்டு சட்டமுறை எடையளவு (பொட்டலப் பொருட்கள்) விதிகளின் கீழ் ஆய்வு மேற்கொள்ள அறி வுறுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து நாகர்கோவில் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மணிகண்டபிரபு தலைமையில் தொழிலாளர் உதவி ஆய்வாளர்களால் நெல், தேயிலை கொள்முதல் நிலையங்கள், கிடங்குகள், நடைபாதைகள் தள்ளுவண்டிகள், காய்கறிகள், மீன் மற்றும் இறைச்சி விற்பனை செய்யும் சந்தைகள் மற்றும் அனைத்து கடைகள், வணிக நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதுகுறித்து தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மணிகண்டபிரபு கூறும்போது, முத்திரை இடப்படாத தரப்படுத்தப்படாத எடை யளவுகள் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் அவை பறிமுதல் செய்யப்பட்டு சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பொட்டலப்பொருட்கள் விதிகளின் கீழ் அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு பொருட்களை விற்பனை செய்தல், உரிய அறிவிப்புகள் இல்லாமல் இருப்பது மற்றும் பொட்டல மிடுபவர், இறக்குகுமதியாளர் பதிவுச்சான்று பெறாதது ஆகிய குற்றங்களுக்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றார்.