என் மலர்
உள்ளூர் செய்திகள்

தக்கலை பஸ் நிலையத்தில் தமிழக அரசின் திட்டங்கள் விளக்க புகைப்படக் கண்காட்சி

- செய்தி மக்கள் தொடர் புத்துறையின் சார்பாக நடந்த புகைப்பட கண்காட்சி
- அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கும் இரு தவணையாக தலா ரூ.2 ஆயிரம் வீதம் ரூ.4 ஆயிரம் வழங்கும் திட்டம்
நாகர்கோவில் :
பத்மநாபபுரம் நக ராட்சிக்குட்பட்ட தக்கலை காமராஜர் பஸ் நிலையத்தில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில், செய்தி மக்கள் தொடர் புத்துறையின் சார்பாக நடந்த புகைப்பட கண்காட்சியை தொடங்கி வைத்து கலெக்டர் அரவிந்த பேசியதாவது:-
தமிழக அரசு ஏழை, எளிய கிராமப்புற மக்களுக்காக பல்வேறு அரசு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. முதல்-அமைச்சர் தொடங்கி வைத்த திட் டங்களான கொரோனா தொற்று காலத்தில் தமிழ கத்திலுள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கும் இரு தவணையாக தலா ரூ.2 ஆயிரம் வீதம் ரூ.4 ஆயிரம் வழங்கும் திட்டம், நியாயவிலைக்க டைகள் வாயிலாக 14 வகையான மளிகை பொருட்கள் பொதுமக்க ளுக்கு விலையில்லாமல் வழங்கும்திட்டம்,
ஆவின் பால் விலையினை ரூ.3 குறைத்து வழங்கும் திட்டம், மகளிர் மற்றும் திருநங்கைகளுக்கு இலவச பேருந்து பயணத்திட்டம், உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் எனும் திட்டம், கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்து வமனைகளில் சிகிச்சை பெறுபவர்களுக்கு முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் சிகிச்சை அளிக்கும் திட்டம், மக்களை தேடி மருத்துவம் ஆகிய திட்டங்கள் குறித்து செய்தி மக்கள் தொடர் புத்துறையின் சார்பாக அமைக்கப்பட்டிருந்த புகைப்பட கண்காட் சியினை பொதுமக்கள் பார்வையிட்டு அரசின் திட்டங்களை தெரிந்து கொண்டு அனைத்துத் திட்டத்தின்கீழ் வழங்கப் படும் அரசு நலத்திட்ட உதவிகளை பெற்று பயன் பெற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.