search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கரும்பாட்டூர் ஊராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
    X

    கரும்பாட்டூர் ஊராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

    • தூய்மை பாரத இயக்கம் சார்பில் நெகிழி இல்லா தமிழகம், நெகிழி இல்லா ஊராட்சி என்ற தலைப்பில் நடந்த பேரணி
    • சோட்ட பணிக்கன் தேரிவிளை வழியாக சென்று மீண்டும் பள்ளியில் நிறைவடைந்தது

    நாகர்கோவில்:

    கரும்பாட்டூர் ஊராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தூய்மை பாரத இயக்கம் சார்பில் நெகிழி இல்லா தமிழகம், நெகிழி இல்லா ஊராட்சி என்ற தலைப்பில் நடந்த பேரணிக்கு ஊராட்சி தலைவர் தங்கமலர் தலைமை தாங்கினார்.

    கோட்டையடி அரசு பள்ளியில் இருந்து தொடங்கிய பேரணி சோட்ட பணிக்கன் தேரிவிளை வழியாக சென்று மீண்டும் பள்ளியில் நிறைவடைந்தது.

    பேரணியை அகஸ்தீஸ்வரம் வட்டார வளர்ச்சி அலுவலர் நீல.பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.பேரணியில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேமலதா பள்ளி தலைமை ஆசிரியர் நாகேஸ்வரி, கவுன்சிலர்கள் ஆல்வின், கீதா, ஞானமணி, ஊராட்சி செயலாளர் காளியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×