search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரியில் மழை நீடிப்பு - திற்பரப்பு 22.2 மி.மீ. மழை; வீடு இடிந்தது
    X

    குமரியில் மழை நீடிப்பு - திற்பரப்பு 22.2 மி.மீ. மழை; வீடு இடிந்தது

    • குமரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் குளுகுளு சீசன் நிலவுகிறது
    • சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மழை கொட்டியதையடுத்து திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியது

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் குளுகுளு சீசன் நிலவுகிறது.

    நேற்று இரவும் விட்டுவிட்டு மழை பெய்து வந்த நிலையில் இன்று அதிகாலையிலும் மாவட்ட முழுவதும் மழை நீடித்தது. நாகர்கோவிலில் காலை முதலே வானத்தில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டது. அவ்வப்போது சாரல் மழை பெய்தது.

    வடசேரி, பார்வதிபுரம், கோட்டார், புத்தேரி பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது. கோட்டார் பகுதியில் மழையின் காரணமாக சாலை சேறும், சகதியுமாக மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது.

    இரணியல், தக்கலை, மார்த்தாண்டம், குலசேகரம், கொட்டாரம், மயிலாடி, பூதப்பாண்டி, ஆணைக்கிடங்கு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று மழை பெய்தது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளிலும் மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் பெய்து வரும் மழையின் காரணமாக அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    திற்பரப்பு அருவி பகுதியில் நேற்று இரவு பலத்த மழை கொட்டி தீர்த்தது. சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மழை கொட்டியதையடுத்து அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியது. அங்கு அதிகபட்சமாக 22.2 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.பேச்சிப்பாறை நீர்மட்டம் இன்று காலை 39.50 அடியாக உள்ளது.அணைக்கு 939 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 639 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 60.80 அடியாக உள்ளது.அணைக்கு 769 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.அணையில் இருந்து 160 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.சிற்றாறு-1அணை நீர்மட்டம் 11.28 அடியாகவும் சிற்றார்- 2 அணை நீர்மட்டம் 11.38 அடியாகவும் பொய்கை நீர்மட்டம் 16.90 அடியாகவும் மாம்பழத்துறையார் அணையின் நீர்மட்டம் 28.63 அடியாகவும் உள்ளது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை12, பெருஞ்சாணி 15. 6, சிற்றாறு1- 7.2, சிற்றார்-2-6.4 , பூதப்பாண்டி-12.6, களியல்-18.4, கன்னிமார்-8.2, கொட்டாரம்-2.8, குழித்துறை-4 , மயிலாடி-3.8 , நாகர்கோவில்-7.6, தக்கலை 5, சுருளோடு 11, பாலமோர்-16.4 , இரணியல்-9, திற்பரப்பு-22.2, ஆரல்வாய்மொழி-4, கோழி போர் விளை-9, அடையாமடை-4.4, குறுந்தன்கோடு-6.8.

    திருவட்டார் ஒன்றியத்குட்பட்ட பகுதியில் வீடு ஒன்று இடிந்து விழுந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    Next Story
    ×