என் மலர்
உள்ளூர் செய்திகள்
ராஜாவூர் புனித மிக்கேல் அதிதூதர் திருத்தல திருவிழா தேர்பவனி
- விழா நாட்களில் தினமும் மாலை ஜெபமாலை, புகழ் மாலை, திருப்பலி ஆகியவை நடைபெற்றது.
- தேர்பவனியில் ஏராளமான பங்கு மக்கள், பேரவையினர் கலந்துகொண்டனர்.
நாகர்கோவில் :
குமரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ராஜாவூர் புனித மிக்கேல் அதிதூதர் திருத்தல திருவிழா கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. முதல் நாள் திருவிழாவில் கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை கலந்துகொண்டு திருப்பலி நிறைவேற்றினார். விழா நாட்களில் தினமும் மாலை ஜெபமாலை, புகழ் மாலை, திருப்பலி ஆகியவை நடைபெற்றது.
விழாவின் 10-ம் நாளான நேற்று அதிகாலை 5.30 மணிக்கு பெருவிழா திருப்பலி, 8.30 மணிக்கு மலையாளத்தில் திருப்பலி, 10 மணிக்கு திருப்பலி, பகல் 12 மணிக்கு ஆடம்பர தேர்பவனி, இரவு 7 மணிக்கு தேரில் திருப்பலி ஆகியவை நடைபெற்றது. தேர்பவனியில் ஏராளமான பங்கு மக்கள், பேரவையினர் கலந்துகொண்டனர்.
திருவிழா ஏற்பாடுகளை பங்குதந்தை ஸ்டான்லி சகாயம், உதவி பங்குதந்தை யர்கள் ரெஜின், ஸ்டாலின், பங்குபேரவை துணை தலைவர் அலெக்சாண்டர், செயலாளர் எம்.என்.ராஜ பாலன், துணை செயலாளர் கலாமேரி, பொருளாளர் ஆன்றோஸஸி மற்றும் பங்குபேரவையினர், அருட் சகோதரிகள், பங்கு இறை மக்கள் செய்திருந்தனர்.