என் மலர்
உள்ளூர் செய்திகள்
குளச்சல் அருகே பிளஸ் 2- மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த உறவினர் கைது
- புகாரின் பேரில் போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.
- மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கன்னியாகுமரி:
கருங்கலை அடுத்த தொலையாவட்டம் கம்பளார் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியின் 17-வயதான மகள் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு பயின்று வருகிறார்.
கடந்த 13-ந்தேதி சனிக்கிழமை மாணவியின் தந்தை மற்றும் தாய் கூலி வேலைக்கு சென்ற நிலையில் மாணவி மட்டும் தனியாக வீட்டில் இருந்துள்ளார். அப்போது வீட்டிற்கு வந்த தந்தை வழி உறவினரான கொத்தனார் வேலை பார்க்கும் 41-வயதான ஜாண் செல்வன் என்பவர் அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததோடு மாணவியை மிரட்டியும் உள்ளார்.
இந்த நிலையில் வீட்டிற்கு வந்த தாயிடம்,சிறுமி நடந்தவற்றை கூறிய நிலையில் சம்பவம் குறித்து தாயார் குளச்சல் அனைத்து மகளிர் போலீஸ் நிலை யத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். மேலும் மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்து தலைமறைவாக இருந்த ஜாண் செல்வன் கைது செய்யப்பட்டார். அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.