என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![நாகர்கோவில் மாநகராட்சியில் ரூ.15.18 லட்சம் மதிப்பீட்டில் சாலை பணிகள் நாகர்கோவில் மாநகராட்சியில் ரூ.15.18 லட்சம் மதிப்பீட்டில் சாலை பணிகள்](https://media.maalaimalar.com/h-upload/2023/11/01/1975217-15.webp)
X
நாகர்கோவில் மாநகராட்சியில் ரூ.15.18 லட்சம் மதிப்பீட்டில் சாலை பணிகள்
By
மாலை மலர்1 Nov 2023 1:20 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
- ரூ.13.68 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி
நாகர்கோவில் :
நாகர்கோவில் மாநகராட்சியில் பல்வேறு சாலைப் பணிகளை மேயர் மகேஷ் தொடங்கி வைத்து வருகிறார். இன்று 6-வது வார்டுக்குட்பட்ட நீல நாடார் தெரு, மூன்லைட் தெரு ஆகிய பகுதிகளில் ரூ.13.68 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி, 7-வது வார்டுக்குட் பட்ட பள்ளிவிளை, ஆதி சக்தி தெருவில் ரூ.2.50 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி போன்றவற்றை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.
மண்டல தலைவர் ஜவகர், உதவி பொறியாளர் சந்தோஷ், கவுன்சிலர் பால் தேவராஜ் அகியா, பகுதி செயலாளர் சேக் மீரான், மாநகர துணைச் செயலாளர் வேல்முருகன், இளைஞர் அணி அமைப்பாளர் அகஸ்தீசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
X