என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![ரோகிணி பொறியியல் கல்லூரியில் இளநிலை முதலாம் ஆண்டு வகுப்பு தொடக்கம் ரோகிணி பொறியியல் கல்லூரியில் இளநிலை முதலாம் ஆண்டு வகுப்பு தொடக்கம்](https://media.maalaimalar.com/h-upload/2023/09/17/1951553-3.webp)
ரோகிணி பொறியியல் கல்லூரியில் இளநிலை முதலாம் ஆண்டு வகுப்பு தொடக்கம்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகளுக்கான வகுப்பு தொடக்க விழா நடைபெற்றது.
- கல்வியின் தேவையையும், முக்கியத்துவத்தையும் அதில் சிறந்து விளங்க செய்ய வேண்டியவற்றையும் எடுத்துரைத்தார்
நாகர்கோவில் :
அஞ்சுகிராமம் அருகே பால்குளத்தில் அமைந்துள்ள ரோகிணி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் இளநிலை பொறியியல் முதலாம் ஆண்டு மாணவ-மாணவி களுக்கான வகுப்பு தொடக்க விழா நடைபெற்றது.
கல்லூரி தலைவர் நீல மார்த்தாண்டன், துணை தலைவர் நீலவிஷ்ணு, நிர்வாக இயக்குனர் பிளஸ்ஸி ஜியோ ஆகியோர் தலைமை தாங்கினர். கல்லூரி முதல்வர் ராஜேஷ் முன்னிலை வகித்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
பொறியியல் கல்வியின் தேவையையும், முக்கியத்துவத்தையும் அதில் சிறந்து விளங்க செய்ய வேண்டியவற்றையும் எடுத்துரைத்தார். கணினி துறை பேராசிரியர் மீனாட்சி யம்மாள் முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்களை வரவேற்று பேசினார். வேதி யியல் துறை பேராசிரியர் ராதிகா கல்லூரியின் கட்ட மைப்பு வசதி பற்றி விளக்கி னார். ஆங்கிலத்துறை பேரா சிரியர் ஷாமிலா பேகம் கல்லூரியின் விதிமுறை களை பற்றி எடுத்துரைத்தார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முதலாம் ஆண்டு துறையின் தலைவர் மற்றும் பேராசிரியர், பேராசிரியை செய்து இருந்தனர்.