என் மலர்
உள்ளூர் செய்திகள்

நாகர்கோவில் கார்மல் மேல்நிலைப் பள்ளியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டபோது எடுத்த படம்
நாகர்கோவில் கார்மல் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
- அறிவியல் மனப்பான்மை உருவாக வேண்டும்.
- நிகழ்ச்சி ஏற்பாடுகளை கார்மல் அறிவியல் கழகம் செய்திருந்தது.
நாகர்கோவில்:
நாகர்கோவில் கார்மல் மேல்நிலைப் பள்ளியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டது. பள்ளி தாளாளரும் இல்ல அதிபருமான ஜெரோம் ஆசி வழங்கினார்.
முன்னாள் தலைமை ஆசிரியர் ஜெரோம் சேவியர் விழாவில் பங்கேற்று பேசுகையில், அறிவியல் மனப்பான்மை உருவாக வேண்டும். மாணவர்கள் படிக்கும் பருவத்திலேயே படைப்பாற்றல் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.
தலைமை ஆசிரியர் மரிய பாஸ்டின், உதவி தலைமை ஆசிரியர் ஜேசு நேசம், கூடுதல் உதவி தலைமை ஆசிரியர்கள் ஜெரோம், ஜான் உபால்டு, அமல்ராஜ், ஆசிரியர் அலுவலகச் செய லர் பபிலன், அறிவியல் கழகத் தலைவர் பாபு சைமன் ராஜ் மற்றும் ஆசிரியர்கள் பினுமோன், டைட்டஸ் மற்றும் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
மாணவர்களுடைய அறிவியல் படைப்புகளை வெளிப்படுத்தக்கூடிய கண்காட்சியை ஜெரோம் சேவியர் தொடங்கி வைக்க, திருச்சிலுவைக் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர்கள் செபஸ்டின் அம்மாள், லெஸ்லி பாத்திமா, ஜெரோம் கல்லூரி பேராசிரியர் ரதி ஆகியோர் மாணவர்களின் படைப்புகளை மதிப்பீடு செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கார்மல் அறிவியல் கழகம் செய்திருந்தது.