என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலில் இந்து முன்னணி சார்பில் கையெழுத்து இயக்கம்
    X

    இந்து முன்னணி சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தபோது எடுத்த படம் 

    நாகர்கோவிலில் இந்து முன்னணி சார்பில் கையெழுத்து இயக்கம்

    • மாவட்டம் முழுவதும் 5 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்க திட்டம்
    • குமரி மாவட்டத்தில் 1982-ம் ஆண்டு நடைபெற்ற மண்டைக்காடு கலவரத்திற்கு பின்னர் நீதிபதி வேணுகோபால் கமிஷன் அமைக்கப்பட்டது

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் 1982-ம் ஆண்டு நடைபெற்ற மண்டைக்காடு கலவரத்திற்கு பின்னர் அமைக்கப்பட்ட நீதிபதி வேணுகோபால் கமிஷன் பரிந்துரைகளின் படி புதிதாக ஆலயங்கள் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்படாமல் இருந்தது.

    ஆனால் தற்போது அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு கண்டனம் தெரிவித்து குமரி மாவட்டம் முழுவதும் இந்து முன்னணி சார்பில் கையெழுத்து இயக்கம் இன்று நடந்தது.

    நாகர்கோவில் நாகராஜா கோவில் முன்பு நடந்த கையெழுத்து இயக்கத்திற்கு மாவட்ட செயலாளர் ராஜேஸ்வரன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார், நிர்வாகிகள் கண்ணன், சுப்பிரமணியன், பிரவீன், சுரேஷ் பாபு, தியாகராஜன், மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மாவட்டம் முழுவதும் 5 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்க திட்டமிடப்பட்டிருப்பதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×