search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலில் தொழில் முதலீட்டுக் கழகம் சார்பில் சிறப்பு கடன் வழங்கும் விழா
    X

    நாகர்கோவிலில் தொழில் முதலீட்டுக் கழகம் சார்பில் சிறப்பு கடன் வழங்கும் விழா

    • தமிழக அரசின் 25 சதவீத முதலீட்டு மானியம் ரூ.1.50 லட்சம் வரை வழங்கப்படும்
    • கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50 விழுக்காடு சலுகை அளிக்கப்படும்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாடு தொழில் முத லீட்டுக் கழகம், மாநில அரசின் ஆதரவுடன் எண்ணற்ற தொழிற் சாலைகளுக்கு கடனுதவி வழங்கி தொழில் வளர்ச்சிக்கு முன்னோடியாக திகழ்கிறது.

    இந்தக் கழகம் புதிய தொழிற்சாலைகளை, சேவை நிறுவனங்களை நிறுவுவதற்கும் தற்போது இயங்கி கொண்டிருக்கும் பிரிவுகளை விரிவுபடுத்து வதற்கும் உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கும் சிறப்புத் திட்டங்களின் கீழ் கடனுதவி வழங்கி வருகிறது.

    நாகர்கோவிலில் உள்ள கிளை அலுவலகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் விழா நாளை (21-ந் தேதி) முதல் 1-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    விழாவிற்கான தொடக்க விழா மாவட்ட கலெக்டர் தலைமையில் 23-ந் தேதி காலை 10.30 மணிக்கு கலெக்டர் அலுவலகத்திற்கு அருகே உள்ள ரோட்டரி ஹாலில் நடைபெற உள்ளது.சிறப்பு தொழில் கடன் விழாவில் டி.ஐ.ஐ.சி.யின் பல்வேறு திட்டங்களின் சிறப்பு அம்சங்கள், மத்திய-மாநில அரசு களின் மானி யங்கள் (மூலதன மானியம், வட்டி மானியம் மற்றும் இதர மானியங்கள்) புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் போன்ற திட்டங்கள் குறித்த விரிவான விளக்கங்கள் தரப்படுகிறது.

    தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவீத முதலீட்டு மானியம் ரூ.1.50 லட்சம் வரை வழங்கப்படும். இந்த விழா காலத்தில் சமர்ப்பிக்கப்படும் கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50 விழுக்காடு சலுகை அளிக்கப்படும்.

    இந்த அரிய வாய்ப்பினை புதிய தொழில் முனைவோர் ,தொழிலதிபர்கள் பயன்படுத்தி தொழில் திட்டங்களுடன் வருகை தந்து தொழில் கடன் மற்றும் மத்திய-மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்தி கொள்ளலாம்.

    மேலும் தகவல்களுக்கு, 04652- 225774, 9445023493 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    Next Story
    ×