search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு ஓணக்கோடி பட்டு அணிவித்து சிறப்பு வழிபாடு
    X

    கன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு ஓணக்கோடி பட்டு அணிவித்து சிறப்பு வழிபாடு

    • 7-ந் தேதி முதல் 3 நாட்கள் நடக்கிறது
    • ஓணப்பண்டிகையை முன்னிட்டு நடக்கிறது

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஓணப் பண்டிகை வருகிற 7-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.

    வருகிற 7-ந்தேதி உத்திராடம் நட்சத்திரத்தை யொட்டி பச்சை நிறப் பட்டும் 8-ந்தேதி திருவோண நட்சத்திரத்தையொட்டி கேரளபாரம்பரிய உடையான வெண்பட்டும், 9-ந்தேதி அவிட்டம் நட்சத்திரத்தையொட்டி சிவப்புநிறபட்டும் பகவதிஅம்மனுக்கு ஓணக் கோடியாக அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடக்கிறது. இந்த 3 நாட்களும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு எண்ணெய், பால், தயிர், இளநீர், பன்னீர், களபம், சந்தனம், குங்குமம், தேன், பஞ்சாமிர்தம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.

    அபிஷேகம் முடிந்ததும் பகல் 11 மணிக்கு பகவதி அம்மனுக்கு வைரக் கிரீடம், வைரக்கல் மூக்குத்தி, தங்க ஆபரணங்கள், தங்க கவசம் போன்றவை அணிவிக்கப்பட்டு சந்தன காப்பு அலங்காரத்துடன் ஓணக்கோடி பட்டு அணி வித்து அலங்கார தீபாரா தனை நடக்கிறது.

    முன்னதாக 4.30 மணிக்குநிர்மால்ய பூஜை, விஸ்வரூப தரிசனம், அபிஷேகம் போன்றவை நடக்கிறது. பின்னர் காலை 8 மணிக்கு ஸ்ரீ பலி பூஜை, நிவேத்திய பூஜை, உஷ பூஜை, உஷா தீபாராதனை போன்றவை நடக்கிறது. மதியம் உச்சிகால பூஜையும், உச்சிகால தீபாராதனையும் நடக்கிறது.

    மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், இரவு 8 மணிக்கு அம்மனை பல்லக்கில் எழுந்தருளச் செய்து கோவிலின் உள் பிரகாரத்தை சுற்றி மேளதாளங்கள் முழங்க 3 முறை வலம் வரச்செய்யும் நிகழ்ச்சியும் நடக்கிறது. பின்னர் வெள்ளி சிம்மாசனத்தில் அம்மனை எழுந்தருள செய்து தாலாட்டு நிகழ்ச்சி நடக்கிறது. அதைத்தொடர்ந்து அத்தாழ பூஜையும் ஏகாந்த தீபாராதனையும் நடக்கிறது.

    இந்த நிகழ்ச்சிக்கானஏற்பாடு களைகன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் செயல் அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×