search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி. முருகன் கோவில்களில் சூரசம்ஹார விழா

    • கந்த சஷ்டி திருவிழாவின் 6-வது நாளையொட்டி இன்று மாலை நடக்கிறது
    • முருக பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து வருகிறார்கள்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள தேரிவிளை குண்ட லில் ஸ்ரீ முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 37-ம் ஆண்டு கந்த சஷ்டி விழா கடந்த 25-ந்தேதி தொடங்கியது.இதை யொட்டி முருக பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து வருகிறார்கள்.

    6-ம் திருவிழாவான இன்று (ஞாயிற்றுகிழமை) காலை 6-30 மணிக்கு மங்கள இசை, தேவ அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாசனம், கலசபூஜை போன்றவை நடக்கிறது. 8 மணிக்கு சிறப்பு தீபாராதனையும் 10 மணிக்கு அபிஷேகமும் நடக்கிறது. பகல் 12 மணிக்கு சிறப்பு தீபாராதனைக்குப் பின் சுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் பிற்பகல் 2 மணிக்கு சூரன் பவனி நிகழ்ச்சியும் நடக்கிறது.

    கோவிலில் இருந்து புறப்படும் இந்த ஊர்வலம் ஒற்றைப்புளிசந்திப்பு, சுவாமிநாதபுரம் வழியாக விவேகானந்தபுரம் சக்கர தீர்த்தகுளம் சந்திப்பு வரை சென்று திரும்பி கோவில் வழியாக பழத்தோட்டம் முருகன்குன்றம் அடிவா ரத்தை சென்றுஅடைகிறது. அங்கு மாலை 6 மணிக்கு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக் கிறது.

    விழா ஏற்பாடுகளை கன்னியாகுமரி தேரிவிளை குண்டல் ஸ்ரீமுருகன்கோவில் அறங்காவலர்கள் குழு மற்றும் விழா குழுவினர் செய்து வருகிறார்கள்.

    இதேபோல நாகர்கோவில் நாகராஜா கோவிலில் உள்ள பாலமுருகன் கோவில், வடிவீஸ்வரம் அழகம்மன் கோவில், மருங்கூர் சுப்ரமணியசாமி கோவில், தோவாளை திருமலை முருகன் கோவில், சொக்கர் கிரி முருகன் கோவில், ஆரல்வாய்மொழி முருகன் கோவில் உள்பட பல முருகன் கோவில்களில் இன்று மாலை 6 மணிக்கு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது.

    Next Story
    ×