என் மலர்
உள்ளூர் செய்திகள்

சுமைப்பணி தொழிலாளர்கள் 5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நாகர்கோவில் வேப்பமூடு பூங்கா முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது எடுத்த படம்
தமிழ்நாடு சுமைப்பணி தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

- கேரளாவில் இருப்பது போன்று தனி நலவாரியம் அமைக்க வேண்டும்.
- அடையாள அட்டை வழங்க வேண்டும்
நாகர்கோவில்:
தமிழ்நாடு சுமைப்பணி தொழிலாளர்களுக்கு கேரளா வில் இருப்பது போன்று தனி நலவாரியம் அமைக்க வேண்டும். அடை யாள அட்டை வழங்க வேண்டும் என்பது உட்பட 5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நாகர்கோவில் வேப்பமூடு பூங்கா முன்பு இன்று கண்டன ஆர்ப்பா ட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் அய்யப்பன் தலைமை தாங்கி னார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் தங்க மோகனன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் சந்திரபோஸ், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் பொன் சோபன ராஜ், மாநில குழு உறுப்பினர்கள் இந்திரா, சித்ரா மற்றும் நிர்வாகிகள் நாகராஜன், பொன் சுந்தர், மாரிமுத்து, பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியு றுத்தி கோஷங்கள் எழுப்ப ப்பட்டன.