என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
குளிர்பானம் குடித்த கல்லூரி மாணவர் சாவு விவகாரம்
- காதலி-பெற்றோரிடம் போலீசார் விசாரணை
- வழக்கு மாவட்ட குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றம்
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தவர் ஷரோன் ராஜ் (வயது 23). இவரது சொந்த ஊர் தமிழக-கேரள எல்லையில் உள்ள பாறசாலை முரியங் கரை ஆகும்.
அந்த பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணை ஷரோன் ராஜ் காதலித்துள்ளார். கடந்த 14-ந்தேதி அந்த பெண்ணின் வீட்டிற்கு தனது நண்பருடன் சென்றுள்ளார். வீட்டிற்குள் அவர் மட்டும் சென்று திரும்பினார். சிறிது நேரத்தில் வயிறு வலிப்பதாக கூறிய அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரி யில் சேர்த்தனர்.
திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த ஷரோன் ராஜ் கடந்த 25-ந்தேதி பரிதாபமாக இறந்தார். அவரது கிட்னி உள்பட உடல் உறுப்புகள் செயல் இழந்திருந்ததால் பாற சாலை போலீசாருக்கு டாக்டர்கள் தகவல் கொடுத்தனர்.
இதற்கிடையில் தனது மகன் சாவில் மர்மம் உள்ளது, அவன் காதலித்த பெண் கொடுத்த குளிர்பா னத்தை குடித்த பிறகே ஷரோன் ராஜுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவரது தந்தை ஜெயராஜன் போலீசில் புகார் கொடுத்தார்.
இந்த புகார் தொடர்பாக பாறசாலைபோலீசார் உரிய விசாரணை நடத்தப்பட வில்லை என்றும் அவர் கூறினார். இதற்கிடையில் இந்த வழக்கு மாவட்ட குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டது.
திருவனந்தபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு தலைைமயில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். அவர்கள் ஷரோன் ராஜின் நண்பரை விசாரித்தபோது, பெண்ணின் வீட்டில் குளிர் பானம் குடித்ததாக ஷரோன் ராஜ் தெரிவித்ததாக கூறினார். இதன் அடிப்படையில் அந்த பெண் மற்றும் அவரது பெற்றோரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர்.
இதற்காக அவர்களை விசாரணைக்கு ஆஜராகும்படி அறிவுறுத்தி உள்ளனர். இன்று மாலை அவர்களிடம் விசாரணை நடத்தப்படக் கூடும் என தெரிகிறது.