என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![இரட்டை பணிக்காக சந்தையடி ரெயில்வே கேட் இன்று மாலை முதல் காலை வரை அடைப்பு இரட்டை பணிக்காக சந்தையடி ரெயில்வே கேட் இன்று மாலை முதல் காலை வரை அடைப்பு](https://media.maalaimalar.com/h-upload/2023/09/21/1953572-11.webp)
இரட்டை பணிக்காக சந்தையடி ரெயில்வே கேட் இன்று மாலை முதல் காலை வரை அடைப்பு
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- மாற்றுப்பாதையில் போக்குவரத்து இயக்கம்
- மக்கள் அதிகம் பயன்படுத்தும் மிகவும் பிரதான சாலையில் அமைந்துள்ள ரெயில்வே கேட்டாகும்.
தென்தாமரைகுளம் :
சந்தையடி ஊரில் 2ரெயில்வே கேட்டுகள் உள்ளது. இதில் ஒன்று சந்தை யடி ஊருக்குள் செல்லும் வழியிலும், மற்றொன்று கோட்டையடியிலிருந்து கொட்டாரம் செல்லும் சாலையில் சந்தையடியில் உள்ளது. இந்த ரெயில்வே கேட் சந்தையடி, இடை யன்விளை, வெள்ளையன் தோப்பு, ஈச்சன்விளை, மேலசந்தையடி, விஜயநகரி, கரும்பாட்டூர், கோட்டையடி ஆகிய பகுதி மக்கள் அதிகம் பயன்படுத்தும் மிகவும் பிரதான சாலையில் அமைந்துள்ள ரெயில்வே கேட்டாகும்.
அந்த இடத்தில் இரட்டைரெயில் பாதை அமைக்கும் பணி நடைபெறுவதால் இன்று (21-ந்தேதி) மாலை6 மணிமுதல் நாளை காலை 6 மணிவரை ரெயில்வே கேட் மூடப்படும் என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சந்தையடி ஊரில்உள்ள மற்றொரு கேட்டு அடைக்கப்படாததால் அந்த கேட் வழியாக வாகனங்கள் செல்லவும் ஏற்பாடு செ ய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த ரெயில்வே கேட் வழியாக செல்லும் ஊர் மக்களின் வாகனங்கள் மாற்றுப் பாதையில் செல்வதற்கு அறிவிப்பு பலகை ரெயில்வே நிர்வாகம் சார்பில் வைக்க ப்பட்டுள்ளது.