என் மலர்
உள்ளூர் செய்திகள்
இன்று சகல ஆத்துமாக்கள் தினம் - கல்லறை தோட்டங்களில் குவிந்த கிறிஸ்தவர்கள் இறந்த முன்னோர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி
- ங்கள் முன்னோர் அடக்கம் செய்யப்பட்ட கல்லறையை சுத்தம் செய்து அதில் மெழுகுவர்த்தி மற்றும் வண்ண மலர்களால் அலங்கரித்தனர்.
- நாகர்கோவில் சி.எஸ்.ஐ. கல்லறை தோட்டங்களிலும் ஏராளமானோர் குவிந்து பிரார்த்தனை செய்தனர்.
நாகர்கோவில் :
உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 2-ந் தேதியை சகல ஆத்துமாக்கள் தினமாக அனுஷ்டிப்பது வழக்கம்.
இந்நாளை கல்லறை திருநாள் என்றும் அழைப்பார்கள். இந்த நாளில் கிறிஸ்தவர்கள் கல்லறை தோட்டங்களுக்கு சென்று அங்கு அடக்கம் செய்யப்பட்ட முன்னோர்களுக்கு அஞ்சலி செலுத்துவது வழக்கம்.
அதன்படி இன்று குமரி மாவட்டம் முழுவதும் உள்ள கல்லறை தோட்டங்களில் காலை முதலே கிறிஸ்தவர்கள் குவிந்தனர். அவர்கள் தங்கள் முன்னோர் அடக்கம் செய்யப்பட்ட கல்லறையை சுத்தம் செய்து அதில் மெழுகுவர்த்தி மற்றும் வண்ண மலர்களால் அலங்கரித்தனர்.
நாகர்கோவில் சி.எஸ்.ஐ. கல்லறை தோட்டங்களிலும் ஏராளமானோர் குவிந்து பிரார்த்தனை செய்தனர். இதுபோல கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் கல்லறை தோட்டங்களில் இன்று மாலை சிறப்பு வழிபாடு மற்றும் திருப்பலி நடக்கிறது.
கோட்டார் சவேரியார் பேராலய கல்லறை தோட்டம், நாகர்கோவில், ராமன்புதூர், புன்னை நகர், கோணம் உள்ளிட்ட நகரின் அனைத்து பகுதிகளில் உள்ள கல்லறை தோட்டங்களிலும் இன்று மாலை சிறப்பு வழிபாடு மற்றும் திருப்பலி நடைபெறுகிறது.