என் மலர்
உள்ளூர் செய்திகள்
கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
- கடற்கரை களை கட்டியது
- ஞாயிற்றுக்கிழமை விடுமுறையான இன்று கூட்டம் கூடியது
கன்னியாகுமரி :
கன்னியாகுமரியில் வாரத்தின் கடைசி நாட்க ளான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழ மை போன்ற விடுமுறை நாட்களிலும் பண்டிகை கால விடுமுறை நாட்களிலும் கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் காணப்படுகிறது.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று கன்னியாகுமரிக்கு வட மாநில சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. இன்று கன்னியா குமரிக்கு வட மாநில சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப் பட்டது. இதனால் இன்று அதிகாலை கன்னியாகுமரி கடலில் சூரியன் உதயமாகும் காட்சியை காண முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியிலும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு கிழக்கு பக்கம் உள்ள கிழக்கு வாசல் கடற்கரை பகுதியிலும் சுற்றுலா பயணிகள் திரண்டு இருந்தனர்.
அதேபோல கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துஉள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்ப்பதற்காக படகுத்துறையிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. மேலும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில், விவேகானந்த கேந்திர வளாகத்தில் அமைந்துள்ள பாரத மாதா கோவில் ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம், காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், அரசு அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம், மீன்காட்சி சாலை, அரசு பழத்தோட்டம் சுற்றுச்சூழல் பூங்கா, வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலா தளங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
இதனால் சுற்றுலா தலங்கள் களை கட்டியது. மேலும் சுற்றுலா பயணிகள் வருகை "திடீர்"என்று அதி கரித்ததால் கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுஇருந்தது. கடலோர பாதுகாப்பு குழுமபோலீசார், சுற்றுலா போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.