என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
கன்னியாகுமரியில் சுற்றுலா பயணியின் மோட்டார் சைக்கிள் திருட்டு
Byமாலை மலர்26 April 2023 12:05 PM IST
- மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சுற்றுலா இடங்களை சுற்றி பார்க்க ஆரோக்கியம் சென்றார்
- நிறுத்தப்பட்டிருந்த அவரது மோட்டார் சைக்கிள் மாயமாகி இருந்தது.
கன்னியாகுமரி :
கேரள மாநிலம் திருவ னந்தபுரம் விழிஞ்சம் பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியம் (வயது45). இவர் தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தார்.
கன்னியாகுமரி காந்தி மண்டபம் அருகே உள்ள முக்கோண பூங்கா முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சுற்றுலா இடங்களை சுற்றி பார்க்க ஆரோக்கியம் சென்றார். சிறிது நேரம் கழித்து அவர் திரும்பி வந்தார்.
அப்போது குறிப்பிட்ட இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த அவரது மோட்டார் சைக்கிள் மாயமாகி இருந்தது. அதனை பல இடங்களில் தேடியும் காணவில்லை. அதனை யாரோ மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.
இதனால் திடுக்கிட்ட ஆரோக்கியம் இது குறித்து கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
X