என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![நாகர்கோவிலில் பரவலாக சாரல் மழை நாகர்கோவிலில் பரவலாக சாரல் மழை](https://media.maalaimalar.com/h-upload/2023/04/09/1863164-9.webp)
நாகர்கோவிலில் பரவலாக சாரல் மழை
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- மேற்கு மாவட்ட பகுதிகளில் மட்டும் மழை பெய்து வந்தது
- பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகளுக்கு 34 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது
நாகர்கோவில் :
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சுட்டெரிக்கும் வெயில் அடித்து வந்தது. வெப்பத்தின் தாக்கம் காரணமாக பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வந்தனர். மேற்கு மாவட்ட பகுதிகளில் மட்டும் மழை பெய்து வந்தது. கிழக்கு மாவட்ட பகுதிகளில் மழை பெய்யவில்லை. தொடர்ந்து கண்ணாமூச்சி காட்டி வந்தது. இதனால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை சீதோசண நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டது. வானத்தில் கரு மேகங்கள் திரண்டு மப்பும் மந்தாரமாக காணப்பட்டது. வடசேரி, கோணம், பார்வதிபுரம், வெட்டூர்ணிமடம் மற்றும் புறநகர் பகுதிகளில் சாரல் மழை பெய்தது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளிலும் லேசான சாரல் மழை பெய்து வரு கிறது.
அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை அணையில் நீர்மட்டம் 34.96 அடியாகவும், பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 36.30 அடியாகவும் உள்ளது. பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகளுக்கு வினாடிக்கு தலா 34 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
திற்பரப்பு அருவி பகுதியிலும் சாரல் மழை பெய்தது. விடுமுறை தினமான இன்று அருவியில் குளிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். அவர்கள் அருவியில் ஆனந்த குளியல் போட்டு மகிழ்ந்தனர்