search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய வழக்கு
    X

    கோப்பு படம் 

    பெண் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய வழக்கு

    • 7 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை
    • குழித்துறை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே கொல்லங்கோடு போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் மெர்சி ரமணி பாய்.

    இவர் கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் 4-ந் தேதி நீரோடு டி துறை மீனவ கிராமத்தில் ரோந்து சென்றார். அப் போது, இரும்பு உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் நின்ற கும்பலை கலைந்து செல்ல கூறினார்.

    ஆனால் அந்த கும்பல் சப்-இன்ஸ்பெக்டரை பணி செய்ய விடாமல் தடுத்ததோடு, ஆயுதங்களால் தாக்கி கொலை செய்ய முயன்றது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெரி பாய், சாலேட், சைஜு, வியாகுல அடிமை, யேசுதாஸ், ராஜூ, கிறிஸ்து தசன் உள்ளிட்ட 7 பேரை கைது செய்தனர்.

    இது தொடர்பான வழக்கு குழித்துறை மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வக்கீல் லிவிங்ஸ்டன் ஆஜராகினார்.

    இந்த வழக்கில் இன்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் அரசு பணியை செய்ய விடாமல் தடுத்ததற்காக 2 ஆண்டுகளும், கொலை முயற்சி குற்றச்சாட்டுக்கு 5 ஆண்டுகளும் விதித்து உத்தரவிட்டார். இந்த 2 தண்டனைகளையும் ஏக காலத்தில் அனுபவிக்கவும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்.

    Next Story
    ×