என் மலர்
உள்ளூர் செய்திகள்

சி.ஐ.டி.யு. தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் ராணி தோட்டத்தில் உள்ள அரசுபோக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடந்தபோது எடுத்த படம்
ராணிதோட்டம் போக்குவரத்து அலுவலகம் முன்பு ஊழியர்கள் முற்றுகை போராட்டம்

- 14-வது ஊதிய ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும்
- ஓய்வு பெற்றவர்களுக்கு அகவிலைப்படி உடனே வழங்க வேண்டும்
நாகர்கோவில்:
காலி பணியிடங்கள் நிரப்ப வேண்டும். தொழிலாளர்களுக்கு விடுப்பு மறுக்கக்கூடாது. 2003-க்கு பின்னர் பணியில் சேர்ந்த தொழிலாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்த வேண்டும்.
14-வது ஊதிய ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும். உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி ஓய்வு பெற்றவர்களுக்கு அகவிலைப்படி உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு. தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் ராணி தோட்டத்தில் உள்ள அரசுபோக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடந்தது.
போராட்டத்திற்கு சங்க தலைவர் சங்கரநாராயண பிள்ளை தலைமை தாங்கினார். செயல் தலைவர் லட்சுமணன் முற்றுகை போராட்டத்தை தொடங்கி வைத்தார். துணை தலைவர் லியோ, ஓய்வு பெற்றோர் நல அமைப்பு நிர்வாகி சுந்தர்ராஜ், நிர்வாகிகள் ஸ்டீபன் ஜெயக்குமார், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் தங்கமோகனன், சுரேஷ்குமார் ஆகியோர் முற்றுகை போராட்டம் குறித்து பேசினர்.
இதில் நிர்வாகிகள் மனோஜ், ஜஸ்டின், அசோக் குமார், தோமஸ், சேவியர்ஜார்ஜ், சிங்காரன், ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.