என் மலர்
உள்ளூர் செய்திகள்
தக்கலை அருகே தூக்குபோட்டு வாலிபர் தற்கொலை
- ஈஸ்டர் பண்டிகையையொட்டி மது குடிக்க மனைவியிடம் வினு பணம் கேட்டுள்ளார்
- மனைவி புனிதா 2 குழந்தைகளையும் அழைத்து கொண்டு அருகில் உள்ள வீட்டில் இருந்துள்ளார்
கன்னியாகுமரி :
தக்கலை அருகே புல்லுவிளை பகுதியை சேர்ந்தவர் வினு (வயது 38). இவருக்கு புனிதா என்ற மனைவியும், 2 பெண் பிள்ளைகளும் உள்ளனர். வினுவுக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. ஈஸ்டர் பண்டிகையையொட்டி மது குடிக்க மனைவியிடம் வினு பணம் கேட்டுள்ளார். மனைவிக்கு மறுக்கவே தகராறு ஏற்பட்டது.
இந்நிலையில் நேற்று மதியம் வினு மது அருந்திய நிலையில் வீட்டுக்கு வந்துள்ளார். மனைவி புனிதா 2 குழந்தைகளையும் அழைத்து கொண்டு அருகில் உள்ள வீட்டில் இருந்துள்ளார். இதனால் ஆவேசம் அடைந்த வினு தூக்குபோட்டு மயங்கிய நிலையில் கிடந்தார். இதனை கண்ட புனிதா அருகில் உள்ளவர்களை அழைத்து அவரை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு வினுவை பரிசோதனை செய்து பார்த்த டாக்டர் அவர் இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து தக்கலை போலீஸ் நிலையத்தில் புனிதா புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.