search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் மேயர் மகேஷ் திடீர் ஆய்வு
    X

    மேயர் மகேஷ் ஆய்வு நடத்திய காட்சி.

    ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் மேயர் மகேஷ் திடீர் ஆய்வு

    • பொது கழிவறையை உடனே சீரமைக்க உத்தரவு
    • இன்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    நாகர்கோவில்:

    ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் உள்ள அம்மா உணவகத்தில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு முறையாக வழங்கப்படவில்லை என்று புகார்கள் வந்தது.

    இதையடுத்து மேயர் மகேஷ் இன்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் உள்ள அம்மா உணவ கத்திற்கு சென்ற அவர் அங்கு வழங்க தயார் செய்து வைக்கப்பட்டிருந்த உணவின் தரத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது காலை நேரங்களில் இட்லிகள் மொத்தமாக வழங்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.

    இது தொடர்பான விவரங்களை அவர் கேட்டு அறிந்தார். சில குறைபாடுகள் இருந்ததை கண்டறிந்த மேயர் மகேஷ் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தார்.பின்னர் ஆஸ்பத்திரி வளாகத்தில் பொது கழிவறை ஒன்று பொதுமக்கள் பயன் பாட்டிற்கு இல்லாமல் இருந்தது தெரிய வந்தது. அந்த கழிவறையை மேயர் மகேஷ் நேரில் சென்று பார்வையிட்ட ஆய்வு செய்தார்.

    அதை உடனடியாக பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவ டிக்கையை மேற்கொண்டார்.மேலும் அங்குள்ள கழிவுநீர் ஓடையை பார்வையிட்டு அதை சுத்தமாக வைத்துக் கொள்ள உத்தரவிட்டார்.ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். டாக்டர்கள் அளித்து வரும் சிகிச்சை முறை குறித்து கேட்டறிந்தார். ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரி வளாகத்தை குப்பைகள் இன்றி சுத்தமாக வைத்துக்கொள்ள மேயர் மகேஷ் அறிவுறுத்தினார்.

    பின்னர் இந்திரா நகர், ஆசாரிபள்ளம் ரோடு பகுதிகளிலும் மேயர்மகேஷ் ஆய்வு செய்தார்.

    ஆய்வின் போது மாநகர் நல அதிகாரி ராம்குமார், சுகாதார ஆய்வாளர் மாதவன் பிள்ளை, மண்டல தலைவர் ஜவகர் ஆகியோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×