search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடன்குடி பகுதியில் நிலத்தடி நீரை பாதுகாக்க கருமேனி ஆற்றை பராமரிக்க வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை
    X

    உடன்குடி பகுதியில் நிலத்தடி நீரை பாதுகாக்க கருமேனி ஆற்றை பராமரிக்க வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை

    • கருமேனிஆற்றிற்கு எதிர் திசையில் சிறுநாடார்குடியிருப்பு முதல் தாண்டி அமராபுரம் வரை சுமார் 3 கிலா மீட்டர் தூரம் தண்ணீர் ஏறி நிற்கிறது.
    • இதுபோன்று நிறைய தடுப்பணைகளில் நீர் ஏறி நிற்கும் ஒவ்வொரு இடத்திலும் தடுப்பணை கட்டி நீரைச் சேமித்தால் நிலத்தடி நீரை பாதுகாக்க முடியும்.

    உடன்குடி:

    உடன்குடி பகுதி வழியாக செல்லும் கருமேனி ஆற்றில் சாத்தான்குளம், சுப்பராயர்புரம், ஆத்திக்காடு, சொக்கலிங்கபுரம், (குட்டத்தார்விளை) மணிநகர், உதிரமாடன்குடியிருப்பு, அமராபுரம், மணப்பாடு ஆகிய இடங்களில் சின்ன சின்னபாலங்கள் கட்டப்பட்டுள்ளன.

    ஒவ்வொரு பாலத்தின் அடியிலும் திறப்பு வசதியுடன் கூடிய 5 அடி உயரமுள்ள தடுப்பணை அமைக்க வேண்டும். அவற்றை கருமேனி ஆற்றின் கழிமுக பகுதியான மணப்பாடு அருகிலிருந்து ஒவ்வொன்றாக நிரப்பி அடைக்க வேண்டும். கருமேனிஆற்றின் கடைசி தடுப்பணை மணப்பாடு புதிய பாலம் அருகில் உள்ளது.

    அது நிரம்பி கடலுக்கு வழியும் முன்பாக கருமேனிஆற்றிற்கு எதிர் திசையில் சிறுநாடார்குடியிருப்பு முதல் தாண்டி அமராபுரம் வரை சுமார் 3 கிலா மீட்டர் தூரம் தண்ணீர் ஏறி நிற்கிறது. எனவே இதுபோன்று நிறைய தடுப்பணைகளில் நீர் ஏறி நிற்கும் ஒவ்வொரு இடத்திலும் தடுப்பணை கட்டி நீரைச் சேமித்தால் நிலத்தடி நீரை பாதுகாக்க முடியும். அதுபோல ஸ்ரீவைகுண்டம் தெற்கு பிரதான கால்வாய் மூலம் வரும் தண்ணீர் கடம்பாகுளத்தின் கீழுள்ள 13 பாசன குளங்களையும் நிரப்பிய பின்னர் எஞ்சிய உபரிநீர் திருச்செந்தூர் அருகே உள்ள எல்லப்பநாயக்கன் குளத்திற்கு வரும். பின்பு குலசேகரன் பட்டினம் தருவைக்குளத்திற்கு வந்து மறுகால் விழுந்து அதுவும் கருமேனி ஆற்றிற்கு தான் வர வேண்டும். இரு வழியாக கருமேனி ஆற்றிற்கு தண்ணீர் வந்தால், உடன்குடி வட்டார வறட்சி பகுதிகளை காப்பாற்ற முடியும். நிலத்தடி நீரை பாதுகாக்க கருமேனி ஆற்றை பராமரிக்க வேண்டும் என்று விவசயிகள் சார்பில், நற்பணி நாகராஜன் அனுப்பிய கோரிக்கை மனுவில் கூறியுள்ளார்.

    Next Story
    ×