என் மலர்
உள்ளூர் செய்திகள்
கிருஷ்ணகிரி அரசு கலைக்கல்லூரியில் 50 ஆண்டுகளுக்கு முன்பு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
- ஒன்றுகூடல் நிகழ்ச்சியை நடத்தினார்கள்.
- முன்னாள் மாணவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் கலைக் கல்லூரியில், கடந்த, 1972-ல் கல்லூரியில் சேர்ந்த மாணவர்கள், பொன்விழா ஆண்டு ஒன்றுகூடல் நிகழ்ச்சியை நடத்தினார்கள்.
கிருஷ்ணகிரி, கிருஷ்ணன் கோவில் அருகில் உள்ள மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு அதே ஆண்டு கல்லூரியில் படித்த முன்னாள் எம்.எம்.ஏ. முனிவெங்கடப்பன் தலைமை தாங்கினார்.
கல்லூரி படிப்பை முடித்து சென்னை, பெங்களூரு, ஐதராபாத், டேராடூன், டில்லி உட்பட பல்வேறு பகுதிகளில் பணிகளுக்கு சென்று குடும்பத்துடன் வசித்துவரும் அவர்கள் இந்நிகழ்ச்சிக்காக தங்கள் குடும்பத்துடன் கிருஷ்ணகிரிக்கு வந்தனர்.
அவர்கள் கூறுகையில், 50 ஆண்டுகள் கழித்து நண்பர்கள் சந்தித்தது மகிழ்ச்சியாக உள்ளதாக தெரிவித்தனர். இதில் முன்னாள் மாணவர்கள் கோபாலகிருஷ்ணன், நடராஜன், சாம் இன்பராஜ், ஸ்டான்லி ஜோன்ஸ், தினகரன், பாண்டியன் உள்பட, 45-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.