என் மலர்
உள்ளூர் செய்திகள்
கிருஷ்ணகிரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் பொதுமக்களுக்கான மருத்துவ சிகிச்சை பிரிவு நாளை தொடக்கம்
- நாளை (சனிக்கிழமை) முதல் பொதுமக்களுக்கான மருத்துவ சிகிச்சை தொடங்கு கிறது.
- தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பி ரமணியன் தொடங்கி வைக்கிறார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அருகே போலுப்பள்ளியில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.
இங்கு நாளை (சனிக்கிழமை) முதல் பொதுமக்களுக்கான மருத்துவ சிகிச்சை தொடங்கு கிறது. இதை தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பி ரமணியன் தொடங்கி வைக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி, மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.
இந்த நிலையில் மருத்துவ மனையில் நோயாளி களுக்கு தேவையான வசதிகள் முறைப்படத் தப்பட்டுள்ளதா என்றும், விபத்து மற்றும் அறுவை சிகிச்சை பிரிவு, வெளி நோயாளிகள் பிரிவு, அறுவை அரங்கங்கள், உள்நோயாளி சிகிச்சை வார்டுகள், தீவிர, அதிதீவிர சிகிச்சை பிரிவுகளில் உள்ள வார்டுகளில் மருத்துவ சேவை தொடங்குவது குறித்த முன்னேற்பாடு பணிகளை தமிழக மருத்துவதுறை கல்வி இயக்குனர் நாராயணபாபு ஆய்வு செய்தார்.
அவரிடம் சுமார், 700 படுக்கை, நவீன மருத்துவ உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளதாக மருத்துவகுழுவினர் தெரிவித்தனர். அப்போது கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் சங்கீதா, துணை முதல்வர் சாத்விகா, உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் செல்வி, உதவி உள்ளிருப்பு மருத்துவர் மது, மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், நிர்வாக அலுவலர்கள் சரவணன், வேலுமணி, பொதுப்பணித்துறை, மின்வாரிய துறையினர், செவிலியர்கள், அலுவலர் கள் உடனிருந்தனர்.