என் மலர்
உள்ளூர் செய்திகள்
கிருஷ்ணகிரி வேளாங்கண்ணி பள்ளியில் மாணவ தலைமை பதவியேற்பு விழா
- தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
- ஆண்டு இறுதியில் சிறந்து விளங்கும் குழுவிற்கு சுழற்கோப்பை வழங்கப்படும என்றும் பள்ளி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி வேளாங்கண்ணி சி.பி.எஸ்.இ. பள்ளியில் 2022-2023-ம் ஆண்டிற்கான மாணவ தலைமை பதவியேற்பு விழா நடைபெற்றது.
ஓசூர் செயிண்ட் பீட்டர்ஸ் மருத்துவ கல்லூரியின் செயலாளரும், அதியமான் கல்வி அறக்கட்டளையின் அறங்காவலருமான லாசியா தம்பிதுரை
சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
பள்ளியின் தாளாளர் கூத்தரசன் முன்னிலை வகித்தார். தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
பள்ளியின் முதல்வர் பி.என். அசோக் பதவி யேற்ற மாணவர்களை வாழ்த்தி பேசினார்.தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் இந்த கல்வி ஆண்டு முழுவதும் பதவியில் இருந்து ஆசிரியர்களின் வழிகாட்டுதல்படி கல்வி, ஒழுக்கம், விளையாட்டு போன்ற அனைத்து துறைகளிலும் குழு மாணவர்களை வழி நடத்துவார்கள் என்றும், ஆண்டு இறுதியில் சிறந்து விளங்கும் குழுவிற்கு சுழற்கோப்பை வழங்கப்படும என்றும் பள்ளி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
முடிவில் பள்ளியின் துணை முதல்வர் இம்மானுவேல் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் பொறியாளர் சரவணன், சாதிக், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.