search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காசி விஸ்வநாதர் கோவிலில் வருகிற 20-ந் தேதி குடமுழுக்கு
    X

    காசி விஸ்வநாதர் கோவிலில் வருகிற 20-ந் தேதி குடமுழுக்கு

    • யாகசாலை மண்டபத்தில் 45 புண்ணிய தீர்த்தங்களுக்கு சிறப்பு ஆராதனை.
    • புராதனமிக்க கோவில்களை சிறப்பான முறையில் திருப்பணி செய்து குடமுழுக்கு.

    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை மருத்து வக்குடி விசாலாட்சி அம்பாள் சமேத காசி விஸ்வநாதர் கோவிலில் 84 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 20-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) குடமுழுக்கு நடக்கிறது.

    இதனையொட்டி யாக சாலை மண்டபம் அமைத்து பூர்வாங்க பூஜையின் முதல் நிகழ்வாக சுவாமி, அம்பாள், விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் மூலவர் சன்னதிகளில் திருவிளக்கு ஏற்றும் வைபவம் நடந்தது.

    மன்னார்குடி ஜீயர் இதனை மன்னார்குடி செண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர் சுவாமிகள் திருவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    சென்னை நங்கநல்லூர் பிரம்மஸ்ரீ ரமணி அண்ணா, ஆடு துறை பேரூராட்சி தலைவர் ம.க.ஸ்டாலின், சிவஞா னசம்பந்த சிவாச்சாரியார் ஆகியோர் திருவிளக்கேற்றி சிறப்பு வழிபாடு நடத்தினர்.

    யாகசாலை மண்டபத்தில் 45 புண்ணிய தீர்த்தங்களுக்கு சிறப்பு ஆராதனை செய்து பக்தர்களுக்கு மன்னார்குடி ஜீயர் சுவாமிகள் ஆசி வழங்கினார்.

    பின்னர் அவர் நிருப ர்களிடம் கூறி யதாவது:-

    பழமையான, புராதனமிக்க கோவி ல்களை சிறப்பான முறையில் திருப்பணி செய்து குடமுழுக்கு செய்வது நாட்டிற்கும், மக்களுக்கும் அனைத்து உயிரினங்களுக்கும் நல்லது.

    சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகத்தில் அரசு, தலையிடுவது மிகவும் தவறானது. சமய பாரம்பரிய செயல்பாடுகளில் அரசு தலையிடுவதை தவிர்க்க வேண்டும்.

    கோவில்களில் வரக்கூடிய வருமானங்களை சிவாச்சாரியார்கள், பட்டாச்சாரியார்கள் மற்று ம் பணியாளர்களுக்கு தர அரசு முன் வர வேண்டு ம். கோவில்களின் வருமா னத்தை மற்ற பயன்பாடுகளுக்கு பயன்ப டுத்துவதை தவிர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×