என் மலர்
உள்ளூர் செய்திகள்

அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்ற போது எடுத்த படம்.
களக்காடு அருகே அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்- திரளான பக்தர்கள் பங்கேற்பு

- முத்தாரம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 6-ந் தேதி தொடங்கியது.
- யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் அடங்கிய குடங்களுடன் சிவாச்சாரியார்கள் கோவிலை சுற்றி வந்தனர்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள நடுச்சாலைப்புதூர் முத்தாரம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 6-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி தினசரி காலை மற்றும் மாலையில் சிறப்பு யாகசாலை பூஜைகள் நடந்து வந்தது.
விழாவின் 3-ம் நாளான நேற்று கும்பாபிஷேக விழா நடந்தது. இதனை முன்னிட்டு அதிகாலையில் மங்கள இசை, கணபதி பூஜைகளை தொடர்ந்து சுவாமிகளுக்கு காப்பு கட்டப்பட்டது. அதன் பின் நாடி சந்தனமும், 4-ம் கால யாகசாலை பூஜைகளும் இடம் பெற்றன. இதனையடுத்து மஹா பூர்ணாகுதியும், தீபாரா தனைகளும் நடத்தப்பட்டது. அதனைதொடர்ந்து கடம் புறப்பாடு நடந்தது. யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் அடங்கிய குடங்களுடன் சிவாச்சாரியார்கள் கோவிலை சுற்றி வந்தனர்.
அதன் பின் சங்கு நாதம் முழங்க, மங்கள வாத்தியங்கள் ஒலிக்க கோவில் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு, கும்பாபி ஷேகம் நடத்தப்பட்டது.
பின்னர் முத்தாரம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் மகா அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடந்தது. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.