என் மலர்
உள்ளூர் செய்திகள்
வடுகச்சேரி கோவில்களில் கும்பாபிஷேகம்
- விக்னேஸ்வர பூஜையுடன், கணபதி, நவக்கிரக, தன பூஜை, பூர்வாங்க பூஜைகளுடன் பூர்ணாஹுதி தீபாரதனை நடைபெற்றது.
- சிவாச்சாரியார்கள் கடத்தை சுமந்து வலம் வந்து கோபுரத்தை அடைந்து புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் வடுகச்சேரி கிராமத்தில் சக்தி விநாயகர்,செல்ல மாரியம்மன், கூத்த பெருமாள் ஐயனார் கோவில்கள் அமைந்துள்ளது.
இக்கோவில்களின் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபி ஷேகத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை விக்னேஸ்வர பூஜையுடன், கணபதி, நவக்கிரக, தன பூஜை, பூர்வாங்க பூஜைகளுடன் பூர்ணாஹுதி தீபாரதனை நடைபெற்றது.
தொடர்ந்து வாஸ்து சாந்தி, லட்சுமி ஹோமம், ரக்ஷாபந்தனத்துடன் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.
இன்று காலை யாகசாலை பூஜையுடன் மகா பூர்ணாஹுதி நடைபெற்றது. தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் கடத்தை சுமந்து வலம் வந்து கோபுரத்தை அடைந்து புனித நீர் ஊற்றப்பட்டு மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து, சித்தி விநாயகர், கூத்த பெருமாள் ஐயனார், செல்ல மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கலச நீர் கொண்டு அபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.