என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![வீரபத்திரசாமி கோவிலில் கும்பாபிஷேக விழா வீரபத்திரசாமி கோவிலில் கும்பாபிஷேக விழா](https://media.maalaimalar.com/h-upload/2023/09/07/1945991-img-20230906-wa0101.webp)
வீரபத்தி சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த காட்சி.
வீரபத்திரசாமி கோவிலில் கும்பாபிஷேக விழா
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- பக்தர்கள் தலை மீது தேங்காய் உடைத்தலுடன் சிறப்பு பூஜைகள் நடை பெற்றன.
- 20 ஆயிரத்திற்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே உள்ள ஈச்சங்காடு பகுதியில் வீர பத்திர சுவாமி 2-ம் ஆண்டு கும்பாபிஷேக அஷ்டபந்தன விழா நடைபெற்றது. முன்ன தாக செவ்வாய்க்கி ழமை அன்று இரவு சந்தூரில் இருந்து கங்கை பூஜை செய்து கால்நடையாக ஈச்சங்காடு பகுதியில் உள்ள வீரபத்திர சுவாமி கோவிலை வந்த டைந்தது. அன்று இரவு பெரியமொய் சுவாமிக்கு புன்னியதானம் அபிஷே கமும் சேவாட்ட வரவு வேடிக்கையும் நடைபெற்றன.
புதன்கிழமை காலை சித்தப்பசுவாமி மற்றும் நந்தீஸ்வரருக்கு சிறப்பு ஆலங்கார தீபாரதனையுடன் தலை முடி வாங்குதல் மற்றும் விரதம் இருந்த பக்தர்கள் தலை மீது தேங்காய் உடைத்தலுடன் சிறப்பு பூஜைகள் நடை பெற்றன. இதனை தொ டர்ந்து ஸ்ரீ வீரபத்திர சுவாமி மற்றும் நந்தீஸ்வரருக்கு 2-ம் ஆண்டு அஷ்ட்டபந்தன கணபதி ஹோமகுண்ட சிறப்பு அபிஷேக ஆராத னையுடன் மஹா கும்பாபி ஷேகம் நடைபெற்றன.
விழாவினை தொடர்ந்து கோவில் வளாகத்தில் குரும்பர் இன மக்களின் குல வழக்க சேவாட்ட நடனத்து டன், பூசாரி காளை மாட்டின் தலை மீதும், ஆட்டுகடாவின் தலை மீது தேங்காய் உடைத்தும், விரதம் இருந்த பக்தர்களின் தலை மீது தேங்காய் உடைத்தும் தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.
இத்துடன் பக்தர்கள் கரகம் எடுத்தல், தலை கூடுதல் நிகழ்ச்சி நடை பெறறன. இக்கும்பாபிஷேக விழாவினை சந்தூர், ஈச்சங்காடு, மங்கல்பட்டி, வெப்பாலம்பட்டி உள்ளிட்ட 65 கிராமங்களை சேர்ந்த குல தெய்வ கோவிலுக்கு சொந்தமான பங்குதாரர்கள், உறவினர்கள் என 20 ஆயிரத்திற்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை கம்புக்காலப்பட்டி பகுதியை சேர்ந்த ஊர் கவுண்டர் ராஜா, கோவில் பூசாரிக ளான சந்தூர் பகுதியை சேர்ந்த ராஜா, பூவாண்டி மாதையன், வெப்பாலம் பட்டி பகுதியை சேர்ந்த சந்தோஷ், கருப்பேரி பகுதி யை சேர்ந்த சிலம்பு உள்ளிட்ட விழா குழுவினர் செய்தருந்தனர். அத்துடன் பக்தர்களுக்கு சிறப்பு அன்ன தானம் வழங்கப்பட்டது.