என் மலர்
உள்ளூர் செய்திகள்

X
கோப்பு படம்.
ரெயில்முன் பாய்ந்து கூலி தொழிலாளி தற்கொலை
By
மாலை மலர்18 July 2023 1:26 PM IST

- கடந்த சில நாட்களாக அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மனம் உடைந்த நிலையில் இருந்தவர் ஒத்தக்கண் பாலம் வழியாக வந்த அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பாக பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
- ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் அருகே மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் அப்துல் மாலிக் (வயது 59).கூலித் தொழிலாளி. இவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார்.இதனால் அவர் தனது மகன் இலியாசுடன் வசித்து வந்தார்.
கடந்த சில நாட்களாக அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் மனம் உடைந்த நிலையில் இருந்த அப்துல் மாலிக் ஒத்தக்கண் பாலம் வழியாக வந்த அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பாக பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்த திண்டுக்கல் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பொன்னுச்சாமி, எஸ்.பி தனிப்பிரிவு காவலர் ராஜேஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
X