என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
கூலித் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
Byமாலை மலர்29 Sept 2022 3:32 PM IST
- 2 மகன்களும் உள்ளனர்.
- மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்து கொண்டார்.
அன்னூர்,
கோவை அன்னுரை அடுத்துள்ள குப்பேபாளையம், காந்திநகரை சேர்ந்தவர் சோமசுந்தரம்(42).இவருக்கு திருமணம் ஆகி சரிதா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். சோமசுந்தரம் மதுவிற்கு அடிமையானதால் சரிவர வேலைக்கு போகவில்லை என கூறப்படுகிறது.இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் அவர் மன உளைச்சலில் இருந்துள்ளார்.நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
Next Story
×
X