search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செம்பட்டியில் வீட்டை ஜப்தி செய்ய எதிர்ப்பு தெரிவித்து பெண் தீக்குளிக்க முயற்சி
    X

    மண்எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்ற பெண்ணை தடுத்த போலீசார்.

    செம்பட்டியில் வீட்டை ஜப்தி செய்ய எதிர்ப்பு தெரிவித்து பெண் தீக்குளிக்க முயற்சி

    • கடனுக்கு ஈடாக வீட்டை ஜப்தி செய்ய முயன்றதால் பெண் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.
    • போலீசார் தடுத்து நிறுத்தி அவரை அப்புறப்படுத்தி வீட்டை சீல் வைத்தனர்.

    நிலக்கோட்டை:

    செம்பட்டி மூவேந்தர்கால னியை சேர்ந்த ஜீவா மொக்கவீரம்மாள் தம்பதி யினர் சின்னாளபட்டியை சேர்ந்த நடராஜன் மனைவி தமிழ்செல்வியிடம் கடந்த 1997-ம் ஆண்டு கடனாக ரூ.5.5 லட்சம் பெற்றிருந்தனர்.

    இதற்கு ஈடாக மொக்க வீரம்மாள் பெயரில் இருந்த வீட்டை அடமானமாக எழுதி கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஜீவா இறந்துவிட்டநிலையில் கடன் கொடுத்த தமிழ்செல்வி திண்டுக்கல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இதையடுத்து மொக்கவீரம்மாள் பெயரில் இருந்த வீடு தமிழ்செல்வி பெயருக்கு நீதிமன்ற உத்தரவின்பேரில் மாற்ற ப்பட்டதாக கூறப்படுகிறது.

    ஆனால் வீட்டின் உரிமை யாளர் முறைப்படி வீட்டை காலிசெய்து தராமல் காலம் தாழ்த்தி வந்ததால் வீட்டை ஜப்தி செய்து கைப்பற்ற பிப்ரவரி 3-ந்தேதியன்று தமிழ்செல்வி, நீதிமன்ற ஊழியர்கள், போலீசார் உதவியுடன் வந்தனர்.

    அப்போது மொக்க வீரம்மாளும், அவரது உறவினர்கள் வீட்டை ஜப்தி செய்ய விடாமல் தடுத்தனர். இதை யடுத்து நேற்று மீண்டும் போலீசார் வீட்டை ஜப்தி செய்ய வந்தனர். அப்போதும் அந்த வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் 4 குடும்பத்தி னர், மொக்க வீரம்மாள் ஆகியோர் போலீ சாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது மொக்க வீரம்மாள் திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண்எண்ணை கேனை எடுத்து தலையில் ஊற்றி தீக்குளிக்க தற்கொலைக்கு முயற்சிசெய்தார்.

    அப்போது அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் செந்தி ல்குமார் தலைமையிலான போலீசார் மொக்க வீரம்மாள், அவரது உறவி னர்கள், வீட்டில் குடியிருந்த வர்களை வலுக்கட்டாயமாக அங்கிருந்து அப்புறப்படுத்தி விட்டு சீல் வைத்தனர். வீட்டை ஜப்தி செய்ய வந்த நீதிமன்ற ஊழியர்கள் , போலீசார் முன்பு எதிர்ப்புதெரிவித்து பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×