என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிவகிரியில் வானவில் மன்றம் தொடக்கம்
    X

    விழாவில் சிவகிரி பேரூர் தி.மு.க. செயலாளர் டாக்டர் செண்பகவிநாயகம் பேசிய போது எடுத்த படம்.

    சிவகிரியில் வானவில் மன்றம் தொடக்கம்

    • சிவகிரி ஊராட்சி ஒன்றிய ஜவஹர் நடுநிலைப் பள்ளியில் வானவில் மன்றம் தொடக்க விழா நடைபெற்றது.
    • சிவகிரி ஜமீன்தார் விக்னேஷ் ராஜா முன்னிலை வகித்தார்

    சிவகிரி:

    சிவகிரி ஊராட்சி ஒன்றிய ஜவஹர் நடுநிலைப் பள்ளியில் வானவில் மன்றம் தொடக்க விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட மருத்துவரணி அமைப்பா ளரும் சிவகிரி பேரூர் தி.மு.க. செயலாளருமான டாக்டர் செண்பகவிநாயகம் தலைமை தாங்கினார். சிவகிரி ஜமீன்தார் விக்னேஷ் ராஜா, பேரூராட்சி மன்ற நியமனக்குழு உறுப்பினர் விக்னேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பள்ளியின் தலைமை ஆசிரியை மல்லிகா அனைவருக்கும் பொன்னாடை அணிவித்து வரவேற்புரை வழங்கினார்.

    வானவில் மன்றம் ஒருங்கிணைப்பாளர் செல்வி பிரியதர்ஷினி அறிவியல் மற்றும் கணித பரிசோதனை விளக்கங்கள் தந்தார். நிகழ்ச்சியில் ஆசிரியர் பரமசிவன், ஆசிரியை ஆரோக்கியமேரி மற்றும் மாணவ - மாணவிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×