என் மலர்
உள்ளூர் செய்திகள்

கொள்ளை நடந்த டாஸ்மாக் கடை மற்றும் விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார்.
டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் திருட்டு
- அவ்வழியாக சென்றவர்கள் அட்டை பெட்டிகள் சிதறி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
- சுமார் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை கொள்ளை.
மன்னார்குடி:
மன்னார்குடி அருகே டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து மது பாட்டில்கள் கொள்ளை ேபானது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கீழப்பலம் அருகே அரசுக்கு சொந்த மான டாஸ்மாக் கடை உள்ளது.
இந்த கடையில் பணி புரியும் ஊழியர்கள் நேற்று இரவு விற்பனை நேரம் முடிந்த பின்னர் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றனர்.
இந்நிலையில் இன்று காலையில் அந்த வழியாக சென்றவர்கள் டாஸ்மாக் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடைப்பதையும், அதன் அருகே அட்டை பெட்டிகள் சிதறி கிடப்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் இது குறித்து மன்னார்குடி போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
இதைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற் கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில் மர்ம நபர்கள் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து சுமார் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்களை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
இது குறித்து மன்னார்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.