search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாளை புஷ்பலதா கல்வி குழுமத்தில் இலக்கிய திருவிழா
    X

    விழாவில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகளை படத்தில காணலாம்.

    பாளை புஷ்பலதா கல்வி குழுமத்தில் இலக்கிய திருவிழா

    • பொம்மலாட்ட கலைஞர் பாகிரதி பொம்மைகள், முகமூடிகள் கொண்டு கதைகளை காட்சிப் படுத்தினார்.
    • மாணவர்கள் தாங்கள் வாசித்த புத்தகங்களில் கதை மாந்தர்களை பிரதிபலிக்கும் வகையில் முகமூடியாகவும், ஓவியமாகவும் வரைந்து தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

    நெல்லை:

    பாளை புஷ்பலதா கல்வி குழுமம் சார்பில் சிறுவர்களுக்கான இலக்கிய திருவிழா, புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது.

    எழுத்தாளர்கள் வித்யா மணி, விஜயலட்சுமி நாகராஜ், ஆஷா நெகமையா, கவிதா மந்தனா, லுபைனா பந்துக்வாலா, தேவிகா கரியப்பா, விஷ்ணுபுரம் சரவணன் ஆகியோர் தாங்கள் எழுதிய கதைகள் குறித்து மாணவர்களிடையே கலந்துரையாடினர்.

    நாடக ஆசிரியர் சந்திரமோகன் மாணவர்களின் கற்பனை திறனை தூண்டும் வகையில் கதைகள் கூறினார். ஸ்ரீதர் இசை வழியாக கதைகளை மாணவர்களிடம் கூறினார்.

    பொம்மலாட்ட கலைஞர் பாகிரதி பொம்மைகள், முகமூடிகள் கொண்டு கதைகளை காட்சிப் படுத்தினார். விழாவில் பங்கி ரெயின்போ அமைப்பு புத்தக காட்சி நடத்தி வருகிறது.

    மாணவர்கள் தாங்கள் வாசித்த புத்தகங்களில் கதை மாந்தர்களை பிரதிபலிக்கும் வகையில் முகமூடியாகவும், ஓவியமாகவும் வரைந்து தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

    இந்நிகழ்ச்சி 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-1 வரை வகுப்பு வாரியாக நடைபெற்று வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை புஷ்பலதா கல்வி குழுமத்தின் தாளாளர் புஷ்பலதா பூரணன் செய்துள்ளார்.

    Next Story
    ×