என் மலர்
உள்ளூர் செய்திகள்

பாவூர்சத்திரம் அருகே கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை முயற்சி
- உண்டியலை உடைக்கும் சத்தம் கேட்டு வீடுகளில் இருந்து பொதுமக்கள் சிலர் வெளியே வந்தனர்.
- 3 கொள்ளையர்களும் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.
தென்காசி:
பாவூர்சத்திரம் அருகே உள்ள சாலைப்புதூரில் நெல்லை-தென்காசி நான்குவழிச்சாலை ஓரத்தில் இசக்கி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இருந்த உண்டியலை இன்று அதிகாலை 3 மணி அளவில் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர்.
கொள்ளை முயற்சி
அப்போது உண்டியலை உடைக்கும் சத்தம் கேட்டு அப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து பொதுமக்கள் சிலர் வெளியே வந்தனர். அப்போது கோவிலில் உண்டியல் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட முயன்றவர்களை பார்த்து அவர்கள் சத்தமிட்டனர்.
உடனே கொள்ளையர்கள் 3 பேரும் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு தப்பி சென்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் பாவூர்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவில் அருகே உள்ள சி.சி.டி.வி. காட்சிகள் உதவியுடன் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.