என் மலர்
உள்ளூர் செய்திகள்
குட்டியை கொண்டு சென்ற வாகனத்தை பின்தொடர்ந்து ஓடிய தாய்குதிரை
- குட்டியை ஏற்றி சென்ற வாகனத்தை தாய்குதிரை பின்தொடர்ந்து ஓடியது.
- ரோட்டில் திரிந்ததால் மாநகராட்சி ஊழியர்கள் பிடித்தனர்.
மதுரை
மதுரை மாநகர போக்குவரத்து சாலைகளில் மாடுகள், குதிரைகள் ஆகியவை சுதந்திரமாக சுற்றித் திரிகின்றன. எனவே அந்த பகுதியில் அடிக்கடி சாலை விபத்துக்கள் ஏற்படுகின்றன. இது தொடர்பாக மாநகராட்சிக்கு புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் மாநகராட்சி ஊழியர்கள் இன்று நகர் பகுதியில் ஆய்வு நடத்தி சாலைகிளில் சுற்றி திரிந்த மாடு, குதிரைகளை பிடித்து சென்றனர்.
மதுரை வைகை தென்கரை பகுதியில் போக்குவரத்துக்கு இடையூராக சுற்றித் திரிந்த குதிரைகளை பிடித்து அபராதம் விதிக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த குதிரை குட்டியை பிடித்து வாகனத்தில் ஏற்றி கொண்டு சென்றனர்.
இதைப்பார்த்த தாய் குதிரை மாநகராட்சி வாகனத்தை பின் தொடர்ந்தபடி வெகு தூரம் ஓடிச் சென்றது. குட்டியை மீட்பதற்காக தாய் குதிரை நடத்திய பாசப்போராட்டம் பொதுமக்களை ஆச்சரியப்பட வைத்தது.