என் மலர்
உள்ளூர் செய்திகள்

X
இன்ஸ்டாகிராமில் வாலிபர் தொல்லை கொடுத்ததால் இளம்பெண் திடீர் மாயம்
By
மாலை மலர்13 April 2023 2:33 PM IST

- இன்ஸ்டாகிராமில் வாலிபர் தொல்லை கொடுத்ததால் இளம்பெண் திடீரென மாயமானார்.
- அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.
மதுரை
மதுரை கோமதிபுரத்தை சேர்ந்தவர் அக்பர். இவரது மகள் ஹசீரா (வயது19). இவருக்கு இன்ஸ்டாகிராமில் கணக்கு உள்ளது.
இவர், ஜெய்ஹிந்த்புரம் பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவருடன் இன்ஸ்டா கிராம் மூலம் பழகி வந்தார். அப்போது சதீஷ், ஹசீராவை காதலிப்பதாக கூறியுள்ளார். தொடர்ந்து அவர் ஹசீராவை தொடர்பு கொண்டு தொல்லை கொடுத்து வந்ததால் அவர் மனவேதனை அடைந்தார்.
இதைத்தொடர்ந்து ஹசீரா நேற்று மதியம் வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. அவரை உறவினர்கள் வீடுகளில் தேடிப் பார்த்த னர். ஆனாலும் அவர் எங்கு சென்றார்? என்பது தெரியவில்லை.
இதனால் அதிர்ச்சிய டைந்த அக்பர் தனது மகள் மாயமானது குறித்து அண்ணாநகர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.
Next Story
×
X