என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
பத்ரகாளியம்மன் கோவிலில் ஆடிப்பூரம் சிறப்பு வழிபாடு
Byமாலை மலர்3 Aug 2022 2:01 PM IST
- திருப்பரங்குன்றம் பத்ரகாளியம்மன் கோவிலில் ஆடிப்பூரம் சிறப்பு வழிபாடு நடந்தது.
- அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் கிரிவலப்பாதையில் பத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆடிப்பூரத்தையொட்டி நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு மேல் அம்மனுக்கு சிறப்பு வளையல் அலங்காரம் செய்யப்பட்டு தீபாரா தனை நடைபெற்றது.
இதில் ஏராளமான கர்ப்பிணி பெண்கள், திருமணமாகி குழந்தை இல்லாதவர்கள், திருமணம் ஆகாத பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பூஜை முடிந்தவுடன் அனைத்து பெண்களுக்கும் வளையல் மற்றும் குங்குமம் பிரசாதமாக வழங்கப்பட்டது. மேலும் பக்தர்களுக்கு 5 வகையான பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை கோவில் தலைவர் வேட்டையார், செயலாளர் கார்த்திக், பொருளாளர் காசிராஜன், துணைச்செயலாளர் காமராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Next Story
×
X