search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த நடவடிக்கை
    X

    அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த நடவடிக்கை

    • தொண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்குமாறு மனு கொடுக்கப்பட்டது.
    • ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சேர்ந்தவர் மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.

    மதுரை

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சேர்ந்த வக்கீல் கலந்தர் ஆசிக் அகமது, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பேரூராட்சியில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான ஏழை, எளிய மக்கள் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். தொண்டியைச்சுற்றிலும் நூற்றுக்கணக்கான மீனவ கிராமங்கள் உள்ளன.

    இந்த கிராம மக்கள் அனைவரும் சிகிச்சைக்காக தொண்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்குத்தான் வருகின்றனர். அது மட்டுமல்லாமல், கிழக்கு கடற்கரை சாலையின் அருகில் இந்த மருத்துவமனை உள்ளதால், இந்த சாலையில் நடக்கும் விபத்துகளில் பாதிக்கப்படுபவர்களையும் சிகிச்சைக்காக இங்குதான் கொண்டு வரப்படுகின்ற னர். ஆனால் இந்த மருத்துவ மனையில் உயரிய மருத்துவ வசதி இல்லை. இதனால் விபத்துகளில் சிக்கி படுகாயம் அடைபவர்களுக்கு முதலுதவி சிகிச்சையை மட்டும்தான் இங்கு செய்ய முடிகிறது. மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதனால் பலர் வழியிலேயே உயிரிழக்கும் நிலை ஏற்படு கிறது.

    இதனை கருத்தில் கொண்டு தொண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தக்கோரி சுகாதாரத்துறை அதிகாரி களுக்கு புகார் மனு அனுப்பி இருந்தேன். அந்த மனுவின் அடிப்படையில் தொண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த வழக்கு நீதிபதி கள் மகாதேவன், சத்திய நாராயணபிராசத் ஆகி யோர் முன்பு இன்று விசா ரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, தொண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்துவது குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது என்று தெரி வித்தார்.

    இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கை அரசு ஏற்றுக் கொண்டு, தொண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்துவது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது. எனவே இந்த வழக்கில் மேல் உத்தரவு பிறப்பிக்க தேவையில்லை. இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.

    Next Story
    ×