என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்](https://media.maalaimalar.com/h-upload/2023/10/07/1962150-0141976161-1alanganallur.webp)
அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- மதுரை மேற்கு ஒன்றியத்தில் அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது.
- எதிர்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பூத் கமிட்டி அமைப்பது குறித்து நிர்வா கிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
அலங்காநல்லூர்
மதுரை மேற்கு (தெற்கு) ஊராட்சி ஒன்றியம் பிள்ளையார் நத்தம் கிராமத்தில் அ.தி.மு.க. சார்பில் 2024 நாடாளு மன்ற தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி பூத் கமிட்டி அமைப்பது குறித்த ஆலோசனை கூட்டம் ஒன்றிய செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் தலைமை யில் நடைபெற்றது.
இதில் முன்னாள் அமைச்சர், சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பூத் கமிட்டி அமைப்பது குறித்து நிர்வா கிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
முன்னாள் எம்.எல்.ஏக்கள் தமிழரசன், கருப்பையா, மாணிக்கம், சதன் பிரபாகரன், மாவட்ட விவசாய அணி செயலாளர் ராம்குமார், ஒன்றிய செயலாளர் காளிதாஸ், வாடிப்பட்டி பேரூர் செயலாளர் அசோக்குமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து சிறுவாலை, அம்பலதாடி, விட்டங்குலம் உள்ளிட்ட பல கிராமங்களில் அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி அமைப்பது குறித்த ஆலோ சனை கூட்டம் நடைபெற்றது.