என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு
- மதுரை மாநகராட்சி கூட்டம்: சொத்து வரி உயர்வை ரத்து செய்யாததை கண்டித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
- அ.தி.மு.க. கவுன்சிலர் எஸ்.எம்.டி. ரவி பேசும்போது, சொத்து வரி உயர்வை ரத்து செய்ய சொல்லி ஏற்கனவே வேண்டுகோள் விடுத்திருந்தோம்.
மதுரை
மதுரை மாநகராட்சி கூட்டம் மேயர் இந்திராணி தலைமையிலும், கமிஷனர் சிம்ரன் ஜித் காலோன் முன்னிலையிலும் நடந்தது. பெரும்பாலான அ.தி.மு.க. கவுன்சிலர்கள் சென்னைக்கு சென்றுவிட்டதால், குறை வான கவுன்சிலர்களே கூட்டத்தில் பங்கேற்றனர்.
அ.தி.மு.க. கவுன்சிலர் எஸ்.எம்.டி. ரவி பேசும்போது, சொத்து வரி உயர்வை ரத்து செய்ய சொல்லி ஏற்கனவே வேண்டுகோள் விடுத்திருந்தோம். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என கூறினார். பின்னர் சொத்து வரி உயர்வை ரத்து செய்யாததை கண்டித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. பூமிநாதன் பேசும்போது, தெற்கு தொகுதியில் பாதாள சாக்கடையில் அடைப்பு இருப்பதால் கழிவுநீர் வெளி யேறி ரோட்டில் செல்கிறது. மேலும் குடிநீர் பிரச்சினை ஆங்காங்கே ஏற்படுகிறது. அதனை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.