search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரையில்  நாளை அ.தி.மு.க.வினர் மவுன ஊர்வலம்-அஞ்சலி
    X

    மதுரையில் நாளை அ.தி.மு.க.வினர் மவுன ஊர்வலம்-அஞ்சலி

    • மதுரையில் நாளை அ.தி.மு.க.வினர் மவுன ஊர்வலம்-அஞ்சலி செலுத்துகின்றனர்.
    • நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர்.

    மதுரை

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு தினம் நாளை அனுஷ்டிக்கப்படுகிறது.இது தொடர்பாக மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது:-

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா நினைவு தினத்தை யொட்டி மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நாளை (5-ந்தேதி) காலை 9 மணி அளவில் மதுரை கே.கே. நகரில் உள்ள ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்து வதோடு பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்படு கிறது.

    மாலை 4 மணியளவில் மதுரை பெரியார் பஸ் நிலை யத்தில் இருந்து நேதாஜி ரோடு, மேலமாசி வீதி வழியாக மவுன ஊர்வலமாக சென்று மேலமாசி வீதி-வடக்கு மாசி வீதி சந்திப்பில் மெழுகுவர்த்தி ஏந்தி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு புகழஞ்சலி செலுத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் மதுரை மாநகர அனைத்து நிர்வாகிகளும் பொதுமக்களும் திரளாக பங்கேற்க வேண்டுகிறேன்.

    இவ்வாறு அவர் தெரி வித்துள்ளார்.

    மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கூறியிருப்பதாவது:-

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தையொட்டி மதுரை புறநகர் மாவட்ட கழகத்தின் சார்பில் நாளை அனைத்து பகுதிகளிலும் ஜெயலலிதாவின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தப்படுகிறது.

    திருப்பரங்குன்றத்தில் நடக்கும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா திருவுருவப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்ற நிகழ்ச்சியில் அனைவரும் திரளாக பங்கேற்கும்படி வேண்டுகிறேன். இதை தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்படு கிறது.

    இவ்வாறு அவர் தெரி வித்துள்ளார்.

    மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர்-முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியதாவது:-

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தையொட்டி மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பிலும் அம்மா பேரவை சார்பிலும் டி. குன்னத்தூரில் உள்ள ஜெயலலிதா கோவிலில் உள்ள ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. பொது மக்களுக்கு அன்ன தானமும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் அனைத்து நிர்வாகிகளும் திரளாக பங்கேற்கும்படி வேண்டு கிறேன்.

    இவ்வாறு அவர் தெரி வித்துள்ளார்.

    மதுரை மாநகர் மாவட்ட ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு மாவட்ட செயலாளரான கோபாலகிருஷ்ணன் கூறி யிருப்பதாவது:-

    ஜெயலலிதாவின் நினைவு தினத்தையொட்டி மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நாளை காலை 9 மணி அளவில் மதுரை சட்டக்கல்லூரி முன்பிருந்து மவுன ஊர்வலமாக சென்று கே.கே.நகரில் உள்ள ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். உருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் அனைவரும் திரளாக பங்கேற்கும்படி வேண்டுகிறேன்.

    இவ்வாறு அவர் தெரி வித்துள்ளார்.

    அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் கூறியதாவது:-

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தையொட்டி மதுரையில் அனைத்து பகுதிகளிலும் அ.தி.ம.மு.க. சார்பில் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்துவதுடன், சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் எனது தலைமையில் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர்.

    இவ்வாறு அவர் தெரி வித்துள்ளார்.

    Next Story
    ×