என் மலர்
உள்ளூர் செய்திகள்

கரிமேடு அந்தோணியார் ஆலய தேர்பவனி நடந்தது.
அந்தோணியார் ஆலய தேர்பவனி
- மதுரை கரிமேடு அந்தோணியார் ஆலய தேர்பவனி நடந்தது.
- நாளை அன்னதானம் நடக்கிறது.
மதுரை
மதுரை கரிமேடு புனித அந்தோணியார் ஆலய திருவிழா கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி நேற்று நடந்தது.
மாலையில் ஆலய பங்குத்தந்தை ஜோசப் தலைமையில் உதவி பங்குத் தந்தை சின்னதுறை, டி.நோபிலி பள்ளி முதல்வர் அருட்தந்தை அடைக்கல ராஜா, துணை முதல்வர் அருட்தந்தை ஆனந்த், மதுரை உயர்மறை மாவட்ட பணிக்குழுக்களின் செயலர் அருட்தந்தை சந்தியாகு ஆகியோர் திருப்பலி நிறைவேற்றினர்.
பின்னர் திருப்பலி முடிந்ததும் புனித அந்தோ ணியார் உருவம் தாங்கிய மின் அலங்கார தேர் பவனி நடந்தது. கரிமேடு மார்க்கெட், புதுச்சிறை வீதி, மேலப் பொன்னகரம் முக்கிய வீதி, ராஜேந்திரா மெயின் ரோடு, ஆரப்பா ளையம், ஞான ஒளிவுபுரம் வழியாக மீண்டும் ஆலயம் வந்தடைந்தது.
இன்று மாலை 6.30 மணிக்கு நன்றி திருப்பலி நிறைவேற்றப்படும். அதன் பின்னர் கொடியிறக்கப் பட்டு திருவிழா நிறைவு பெறும். நாளை அன்னதானம் நடக்கிறது.